கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் விதமாக, மேட்டர்ஹான் என்ற மலையில் இந்திய தேசிய கொடியை ஒளிரவிட்ட சுவிட்சர்லாந்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் ஒளிர்விக்கப்பட்ட இந்திய தேசிய கொடி
சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் இந்திய தேசிய கொடி ஒளிரும் புகைப்படம்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் உலகில் கடும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா முதலிடத்திலும், இத்தாலி இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.
சுவிட்சர்லாந்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவல் பாதிப்பு அடைந்துள்ளனர். இதேபோல், இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி வரும் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் என சுவிட்சர்லாந்து தனது ஒற்றுமையை வெளிப்படுத்தி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஆல்ப்சில் மேட்டர்ஹான் என்ற பிரமாண்ட மலையில் வண்ண விளக்குகளால் இந்திய தேசிய கொடியை ஒளிரவிட்டுள்ளது.
கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் இந்தியர்களின் நம்பிக்கையும் வலிமையும் அதிகரிக்கும் வகையில் ஆல்ப்ஸ் மலையில் இந்திய கொடியை ஒளிர விட்டுள்ளோம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் இந்திய தேசிய கொடி ஒளிரும் புகைப்படத்தை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உலகமே கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி வருகிறது. மனித குலம் நிச்சயம் வெல்லும் எனவும் பதிவிட்டுள்ளார்.
Leave a Reply