சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் சுமார் 250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவீத் அஷ்ரப் தெரிவித்தார். இவர்களில் 50 சதவீதம் பேர், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் நெருக்கமாக தங்கி இருப்பவர்கள் ஆவர்.
இந்த இந்தியர்களில் நிரந்தரமாக சிங்கப்பூரில் குடியிருப்பவர்களும் உள்ளனர். அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக தூதர் கூறினார்.
Leave a Reply