சீனாவின் உகான் ஆய்வுக்கூடத்தில் மனிதர்களால் தான் கொரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னேர் தெரிவித்துள்ளார்.
லண்டன்,
சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? அல்லது இயற்கையாகவே உருவானதா என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதற்கிடையில் சீனாவின் மத்திய நகரமான உகானில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து உருவானது என்று நீண்ட காலமாக சொல்லப்பட்டு வருகிறது.
இதுகுறித்த தகவல்கள் வெளி உலகுக்கு வரத்தொடங்கியதும் அந்த சந்தையும் மூடப்பட்டது. இன்று வரை அந்த சந்தை திறக்கப்படவே இல்லை. மூடிதான் கிடக்கிறது.
இந்த நிலையில், “கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல; சீனாவில் உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. அது அங்கிருந்து தப்பித்து வந்துள்ளது” என்று அமெரிக்காவின் ‘பாக்ஸ் நியூஸ்’ டெலிவிஷன் பிரத்யேக செய்தி ஒன்றை வெளியிட்டு, உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் அது தெரிவித்தது.
இந்தநிலையில், உலகம் முழுவதும் பரவி பல லட்சம் பேரை மருத்துவமனையில் கிடக்கச் செய்துள்ள இந்த கொடிய வைரஸ் குறித்த குழப்பமும் சந்தேகமும் பல்வேறு நாடுகளிடம் எழுந்துள்ள நிலையில் எய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் கொரோனா நுண்கிருமி மனிதர்களால் செயற்கையாகப் படைக்கப்பட்டு பரவியதாக பிரெஞ்ச் அறிஞர் லூக் மோன்தக்னேர் தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் என்ற நோயைக் கண்டுபிடித்ததற்காக 2008ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவரான அவர் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
உகான் தேசிய பயோ சேப்டி ஆய்வுக்கூடத்தில் தற்செயலாக நிகழ்ந்த விபத்தின் காரணமாகவே கொரோனா பரவியிருப்பதாகவும் இரண்டாயிரமாண்டு ஆரம்பம் முதலே சீனா இத்தகைய கொரோனா வைரசுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் காட்டு விலங்குகளிடமிருந்து உகான் சந்தைக்குச் சென்றதாக தான் நம்பவில்லை என்று குறிப்பிட்டார். இது ஒரு நல்ல புராணக்கதை, அது சாத்தியமற்றது என்று கூறினார்.
இதே குற்றச்சாட்டை தெரிவித்துள்ள அமெரிக்காவும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply