கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் மற்றொரு பகுதியாக நாடு முழுவதும் மது விற்பனைக்கு தாய்லாந்து அரசு தற்காலிக தடைவிதித்துள்ளது.
பாங்காக்:
தாய்லாந்து சுற்றுலாவுக்கு பெயர்போன நாடாகும். அந்த நாட்டுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினர் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு சென்று மது, ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருப்பது வழக்கம்.
இதனால் அந்த நாட்டில் மது விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால் தற்போது கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக தாய்லாந்தின் பல்வேறு மாகாணங்களில் மதுபான கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் மற்றொரு பகுதியாக நாடு முழுவதும் மது விற்பனைக்கு தாய்லாந்து அரசு தற்காலிக தடைவிதித்துள்ளது.
இந்த தடை நேற்று முன்தினம் உடனடியாக அமலுக்கு வந்தது. வருகிற 20-ந்தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்றும் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Leave a Reply