ஜப்பானில் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் அதிகமாகி உள்ள நிலையில், அங்குள்ள டோக்கியோ உள்ளிட்ட சில பிராந்தியங்களில் அவசர நிலையை பிரதமர் ஷின்ஜோ அபே அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் – ஜப்பானில் அவசர நிலையை அறிவித்தார் ஷின்ஜோ அபே
டோக்கியோ:
சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் 200-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கொடிய வைரசுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் கொத்துக் கொத்தாக செத்து மடிகின்றனர். அதேபோல் உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
அதிலும் குறிப்பாக உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி நிலைகுலைந்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே, அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பானில் அவசர நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பிரதமர் ஷின்ஜோ அபே நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்த முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், ஜப்பானில் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் அதிகமாகி உள்ள நிலையில், அங்குள்ள டோக்கியோ, ஒசாகா மற்றும் 5 பிராந்தியங்களில் அவசர நிலையை பிரதமர் ஷின்ஜோ அபே அறிவித்துள்ளார்.
Leave a Reply