உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 3 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்த 3 லட்சம் பேர்

ஜெனிவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் படிப்படியாக கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் (202 நாடுகள்) இந்த வைரஸ் வேகமாக பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும், மருத்துவத்துறையினரின் தீவிர சிகிச்சை மற்றும் தன்னலமற்ற சேவைகளால் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் 14 லட்சம் பேருக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 14 லட்சத்து 11 ஆயிரத்து 348 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இதுவரை 3 லட்சத்து 759 பேர் சிகிச்சைக்கு பின் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

வைரசிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையை கொண்ட நாடுகள் சில வருமாறு:-

அமெரிக்கா – 21,316
ஸ்பெயின் – 43,208
இத்தாலி – 24,392
பிரான்ஸ் – 19,337
ஜெர்மனி – 36,081
சீனா – 77,167
ஈரான் – 27,039
துருக்கி – 1,582
சுவிஸ்சர்லாந்து – 8,704
பெல்ஜியம் – 4,157
கனடா – 3,922
ஆஸ்திரியா – 4,046
தென்கொரியா – 6,694
ஆஸ்திரேலியா – 2,547
டென்மார்க் – 1,491
மலேசியா – 1,321

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *