தனியார் பள்ளிக் கூடங்கள் ஆண்டு கல்வி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்வி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தனியார் பள்ளிகளுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொழில், வர்த்தகம், விவசாயம் என பல துறைகளும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், தனியார் பள்ளிக் கூடங்கள் ஆண்டு கல்வி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையொட்டி நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளில் மேலும் கூறி இருப்பதாவது:-
ஊரடங்கு காலத்தில், 3 மாதங்களுக்கு மொத்தமாக கல்வி கட்டணம் செலுத்த கூறுவதையும் தனியார் பள்ளிக்கூடங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கல்வி கட்டண சிக்கலை மனதில் கொண்டு மாநில அரசுகளின் கல்வித்துறை இந்தப் பிரச்சினையை கையாளும் என்று நம்புகிறேன். பல மாநிலங்களில்
தனியார் பள்ளிக்கூட கல்வி கட்டண விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையே எல்லா மாநிலங்களும் கருத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Leave a Reply