பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா பரவியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதனால், மக்கள் பேரச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகத்தில் நேற்று மாலை முதல் இன்று நண்பகல் வரை புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 37 பேர் வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில், ஐந்து பேர் மைசூருவைச் சேர்ந்தவர்கள். பெங்களூரு மற்றும் பிதர் நகரத்தைச் சேர்ந்த தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில் அதிகபட்சமாக 72 பேரும், மைசூரு 47 மற்றும் தக்ஷிண கன்னடத்தில் 12 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply