அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், புதிதாக 30 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்:
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 17 லட்சத்து 79 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 67 ஆயிரத்து 620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 4 லட்சத்து 2 ஆயிரத்து 709 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 770 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்
அமெரிக்காவில் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 879 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 30 ஆயிரத்து 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 830 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 30 ஆயிரத்து 453 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply