ஐரோப்பாவில் கொரோனா பலி 75 ஆயிரத்தை கடந்துள்ளது.
பாரீஸ்,
கொரோனா வைரசுக்கு ஐரோப்பாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 80 சதவீதத்தினர் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 4 நாடுகளில் இறந்துள்ளனர்.
ஸ்பெயினில் 16 ஆயிரத்து 972 பேரும், பிரான்சில் 13 ஆயிரத்து 832 நபர்களும், இங்கிலாந்து நாட்டில் 9,875 பேரும், இத்தாலியில் 19 ஆயிரத்து 468 பேரும் நேற்று காலை வரை கொரோனா வைரஸ் தொற்றுநோயில் உயிரிழந்துள்ளனர்.
நேற்று காலை நிலவரப்படி ஐரோப்பாவில் மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரத்து 700-ஐ நோக்கி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சென்று கொண்டிருந்தது.
Leave a Reply