வாஷிங்டன்: கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார்.
சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்ற உலகையே கதி கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாய் மக்கள் பலியாகி வருகின்றனர்.
கடந்த வாரம் அதிபர் டிரம்ப் பேசுகையில், உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா பெருந்தொகையை செலுத்தி வருகிறது. ஆனால் அந்த அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே உலக சுகாதார அமைப்பு அளிக்கப்படும் நிதியை நிறுத்த உள்ளதாக கூறினார்.
டிரம்ப்பின் பேட்டியை அறிந்த உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதனோம், தயவுசெய்து கொரோனா வைரஸ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். கொரோனாவிலிருந்து அரசியலை தனிமைப்படுத்துங்கள். ஆபத்தான வைரசை வீழ்த்த ஒற்றுமை மிக முக்கியம் என எச்சரித்தார்.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில் உலக சுகதார அமைப்பு சரியான நேரத்தில், வெளிப்படையான முறையில் தகவல்களைப் பெறவும், கண்காணிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் தவறிவிட்டது முன்னரே அறிவித்த படி உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதால் எனது அரசு நிர்வாகம் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கும் நிதியுதவி நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
ரூ. 3000 கோடி நிதி நிறுத்தம்
இந்நிலையில் முதற்கட்டமாக உலக சுகாதார அமைப்பிற்கு ரூ. 3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply