இளமை பொங்கி இனிமை ஓங்கிட
வளர்பிறை போல அறிவும் வளர்ந்திட
தெளிவான அறிவுடன் திறமை மிகுந்திட
வளமும் பெருகிட வருவாய் தமிழ் புத்தாண்டே!
மதமும் இனமும்
மனதினே ஆளாமல்
மனிதமும் புனிதமும்
மலையாய் உயரட்டும்..!
இடரும் இன்னலும்
இனிமேலும் துளிராமல்
வளரும் வெண்ணிலவாய்
வருங்காலம் பிறக்கட்டும்..!
செல்வம் பெருகி வறுமை தீர
இல்லாமை என்ற நிலைமை  மறைய
நல்வினை புரிந்து நன்மை பெற்றிட
வல்லமை தந்திட வருவாய் தமிழ்  புத்தாண்டே!
வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!
வயலெல்லாம் விளைந்திருக்க
வாழ்வெல்லாம் உயர்ந்திருக்க
மனமெல்லாம் நிறைந்திருக்க
மங்களமே நிலைத்திருக்க
வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!
மங்களம் பொங்கி
வாழ்வு வளம்பெற
அனைவருக்கும்
இனிய தமிழ்  புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

S .A .சுபாஷ் பண்ணையார்

தலைவர்
பனங் காட்டு மக்கள் கழகம்

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *