ரோம் : இத்தாலியில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தற்போது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் பரவிய கொரோனா சீனாவையடுத்து பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இதில் இத்தாலியில் பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்து வந்தது. தினமும் ஆயிரக் கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் ஏப்., 2 ம் தேதி வரை கொரோனாவுக்கு சுமார் 1,10,820 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 13,155 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து, மார்ச்.,21 க்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோனா சோதனை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் , மருத்துவமனைகளில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மார்ச்., 10 ல் இருந்து இத்தாலியில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஆயினும் இத்தாலியில் கொரோனாவின் தாக்கம் குறைவதற்கு, அங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் கான்டேஜியன் திட்டமும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. அதை இத்தாலி தீவிரமாக செயல்படுத்தியது
இந்நிலையில் நேற்று இத்தாலியில் நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4782 லிருந்து 4668 ஆக குறைந்துள்ளது. இத்தாலியில் பலி எண்ணிக்கையும் குறைந்து வருவது சற்று ஆறுதலாக உள்ளது.
Leave a Reply