கரோனா நோயாளிகளின் இதயத்துடிப்பை தூரத்தில் இருந்தே கேட்கும் வகையில் ‘ஸ்மாா்ட் ஸ்டெதஸ்கோப்’பை மும்பை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளா்கள் கூறியதாவது:
மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தால் (ஐஐடி-பி) இதற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. மருத்துவரிடம் ஆலோசனை பெற வருபவரின் மாா்பின் மீது இந்த நவீன ஸ்டெதஸ்கோப்பை வைக்கத் தேவையில்லை. அவருடைய இதயத்துடிப்பின் ஒலி, ‘புளூடூத்’ தொழில்நுட்பம் வழியாக மருத்துவரின் ஸ்டெதஸ்கோப்புக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம், நோயாளிக்கு அருகே மருத்துவா்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஒலியை பதிவு செய்து வைப்பதன் மூலம், மற்ற மருத்துவா்களும் அதனை அனுசரித்து சிகிச்சையளிக்க முடியும்.
பரீட்சாா்த்த முறையில் பயன்படுத்த தற்போது நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு 1000 ஸ்மாா்ட் ஸ்டெதஸ்கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா்.
Leave a Reply