ஆப்கானிஸ்தானில் இரண்டு பழங்குடியின பிரிவு மக்களுக்கு இடையே நடந்த மோதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: பழங்குடியினர்களுக்கு இடையே மோதல் – 13 பேர் பலி
காபுல்:
ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் அரசுப்படையினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், ஆப்கானிஸ்தானில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் பல தரப்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் ஒரு தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் நங்கர்ஹர் மாகாணத்தின் டூர் பாபா மற்றும் நஸ்யான் மாவட்டத்தில் வாழ்ந்துவந்த இரு தரப்பு பழங்குடியின மக்களுக்கு நடைபெற்ற நிலம் சார்ந்த பேச்சுவார்த்தையில் திடீரென மோதல் வெடித்தது.
இந்த மோதலின் போது இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர்.
இந்த மோதல் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்த சண்டையில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Leave a Reply