ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய வங்கி ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் சில பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் 2001-ம் ஆண்டு முதல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த பயங்கரவாதிகள் பொதுமக்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.
தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப்படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இ
தனால், அரசுப்படைகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் மத்திய வங்கியான டா ஆப்கானிஸ்தான் வங்கி ஊழியர்கள் 5 பேர் நேற்று ஹீரேட் மாகாணத்தில் உள்ள இஸ்லாம் குவாலா நகருக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
குஷன் மாவட்டம் அகமத் அபாட் என்ற பகுதியை கடந்த போது அந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய தலிபான் பயங்கரவாதிகள் அதில் பயணம் செய்த வங்கி ஊழியர்கள்களை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வங்கி ஊழியர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதேபோல், அந்நாட்டின் கந்தகார் மாகாணம் ஸ்பின் பால்கட் மாவட்டத்தில் நேற்று தலிபான் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
Leave a Reply