நாடு திரும்ப விரும்பும் தனது நாட்டினரை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக மூத்த அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்
60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 30,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் 350 க்கும் மேற்பட்ட விமானங்களில் அமெரிக்கா திரும்பி உள்ளனர்
கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பரவுவதைத் தடுக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நிலையில் உள்ள இந்தியாவில் இருந்து, நாடு திரும்ப விரும்பும் தனது நாட்டினரை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக மூத்த அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் நேற்று இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்பும் முயற்சியாக 170 அமெரிக்க குடிமக்களை அழைத்து வந்தோம். “வரவிருக்கும் நாட்களில் புதுடெல்லி மற்றும் மும்பையில் இருந்து சீரான விமான சேவையை நாங்கள் தொடங்குவோம், உண்மையில் இந்த வார இறுதியில் மற்றும் வார இறுதிக்குள் தொடங்கும் என தூதரக விவகாரங்களுக்கான முதன்மை துணை உதவி செயலாளர் இயன் பிரவுன்லீ தெரிவித்தார்.
Leave a Reply