கலிபோர்னியா: கொரோனா வைரஸ் அமெரிக்காவை நிலைகுலைய வைத்துள்ள நிலையில், அடுத்து வரக்கூடிய இரு புயல்கள் கலிபோர்னியா மாகாணத்தை புரட்டிபோட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
முதல் புயல் சனிக்கிழமை(ஏப்.4) கரைக்கு வந்து மாநிலத்தின் வடக்குபகுதியில் மூன்றில் இரண்டு பகுதிக்கு கடுமையான மழை பெய்யும், பின்னர் சியரா மற்றும் வடக்குகலிபோர்னியா மலைகளுக்கு இடைப்பகுதியில் பனி மழையை கொண்டுவரும். பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்து பனி மழையை தரும்..
இரண்டாவது புயல் மேலும் சக்திவாய்ந்ததாகத் தோன்றி ஞாயிற்றுக்கிழமை(ஏப்.5) கரைக்கு வருகிறது, அப்போது கலிபோர்னியா மாகாணத்தின் பெரும்பகுதியில் கன மழையும் பலத்த காற்றும் வீசும் இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.மேலும் ஏப்.5, மற்றும் ஏப்.6 ம் தேதிகளில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான்டியாகோ உள்ளிட்ட தெற்கு கலிபோர்னியாவில் பலத்த மழை பெய்யும். இம்மழை சராசரியை காட்டிலும் மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என அமெரிக்க வானிலை நிலவரம் தெரிவிக்கிறது.
Leave a Reply