மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 1666 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று ஆயிரத்து ஐநூறை தாண்டியது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 1666 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply