ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும், வெளியில் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி? -மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்
ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிய சாலை
புதுடெல்லி:
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி
* கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை
* மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி
* தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்
* பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம்
* ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும்
* கல்வி நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம்
* அத்தியாவசியப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடை இல்லை
* ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி
* 100 நாள் வேலை திட்டத்தின்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்
* ஊரகப் பகுதியில் தொழில் நிறுவனங்கள் இயங்கலாம்
* ஊரகப் பகுதியில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம்
* ஊரகப் பகுதியில் சிறு, குறு தொழில் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்
* லாரிகள் பழுதுபார்க்கும் பட்டறைகள் இயங்க அனுமதி
* நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி
* தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை
* பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம்
* 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது
* பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்.
* எலக்ட்ரீசியன், பிளம்பர், மெக்கானிக்குகள், மரவேலை செய்பவர்கள் பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்.
Leave a Reply