ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய மந்திரிகள் குழு ஆலோசனை நடத்தினர்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பால் அவதிப்படும் மக்களை நெருக்கடியில் இருந்து மீட்பது பற்றி ஆலோசிக்க, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்திய மந்திரிகள் குழுவின் 5-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
உணவுத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மனிதவளத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத், விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பொருளாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு, சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படாத பகுதிகளில் வருகிற 20-ந் தேதி முதல் என்னென்ன கட்டுப்பாடுகளை தளர்த்துவது? என்பது குறித்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Leave a Reply