சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளது. வெப்பம் பரவி வருகிறது. ஊரடங்கால் மக்கள் வேறெங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக …
ஊரடங்கு நீட்டிப்பு; கொரோனா பாதிப்பின் நிலைமைக்கு ஏற்ப முடிவு: முதல் அமைச்சர் பேட்டி
ஊரடங்கு நீட்டிப்பு பற்றி கொரோனா பாதிப்பின் நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டியில் கூறியுள்ளார். சென்னை, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றி வரும் 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அவர் பேசும்பொழுது, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. 2,500 வென்டிலேட்டர்கள் வாங்கவும் மற்றும் 4 லட்சம் …
மே மாதம் நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், மே மாதம் நடைபெறுவதாக இருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காலம் முடிந்த பிறகு, புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்; முதல் அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என முதல் அமைச்சர் பேட்டியில் கூறியுள்ளார். சென்னை, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, தமிழகத்தில் 96.30 சதவீதம் பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 3 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். 73 ஆயிரம் பேருக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது. நலவாரிய தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகத்தில் 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும். சென்னையில் பணியின்பொழுது …
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மணலி, அம்பத்தூர் தவிர்த்து, 13 மண்டலங்களில் மொத்தம் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுதவிர வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆனால் தற்போது சென்னையில் உள்ள 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை! திருவெற்றியூர்-4 மணலி-0 மாதவரம்-3 தண்ட்டையார்பேட்டை-13 …
நாங்கள் அரசியல் செய்யவில்லை உலகசுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது – டொனால் டிரம்ப்
கொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை உலகசுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் கூறினார். வாஷிங்டன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப்போகிறோம் என கூறி இருந்தார். இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறும்போது தயவுசெய்து இந்த கொரோனா வைரஸ் …
ஒடிசா மாநிலத்தில் வரும் 30 – ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஒடிசா மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புவனேஷ்வர், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மாநில முதல்-மந்திரிகளுடன் அவ்வப்போது காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 16 நாட்கள் …
கொரோனா பாதிப்பு: சர்வதேச நாடுகளில் 70% ஹைட்ரோகுளோரோகுயின் தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது
சர்வதேச நாடுகளில் 70 சதவீத ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் தேவையை இந்தியா பூர்த்தி செய்வதாக இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுதர்சன் ஜெயின் தெரிவித்துள்ளார். புதுடெல்லி ஹைட்ராக்சிகுளோராகுயின் உள்ளிட்ட மருந்துப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விலக்கிக்கொண்டது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகையே அச்சறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, அமெரிக்காவுக்கு, இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்திருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். …
58 ஆண்டுகளுக்கு பிறகு ரத்தான உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா!
கேரளாவில் நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கொரோனா பாதிப்புகளால் ரத்து செய்யப்பட்டு உள்ளது. திருச்சூர் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா உலக புகழ்பெற்றது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்கின்றனர். இந்தாண்டுக்கான விழாவை மே 3-ம் தேதி கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் திருவிழாக்கள், கோயில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு திருவிழாவில் வெறும் பூஜைகள் மட்டு்ம் …
இந்தியா – அமெரிக்காவின் உறவு முன்பைவிட வலுவடைந்துள்ளது – பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு இந்திய அனைத்து விதத்திலும் உதவும் என்று ட்விட்டரில் பிரதமர் மோடி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். புதுடெல்லி, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்தது. இதையடுத்து, பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். டொனால்டு டிரம்பின் டுவிட்டுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- இது போன்ற தருணங்கள்தான் நட்பை வலுப்படுத்துகின்றன. …